தலைநகரில் வாகன நெரிசலை ஏற்படுத்திய 12 கார்கள் பறிமுதல்! DBKL!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 28,

தலைநகரில் முதன்மை சாலைகளின் ஓரம் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 கார்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. Jalan Klang Lama, Jalan Dang Wangi, Jalan Sultan Azlan Shah, ஆகிய சாலைகளில் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 104 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சம்மந்தப்பட்ட சாலைகளில் அதிகமான வாகன நெரிசல்கள் ஏற்படுவதாகவும் முன் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தும் அறிவிப்புப் பதாகைகளை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு RM 150 முதல் RM 450 வரையில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *