தலைநகரில் 6 மசாஜ் மையங்களை நிரந்தரமாக மூடிய DBKL!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 15,

தலைநகர் கோலாலம்பூரில் தகாத முறையில் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் மசாஜ் மையங்களைச் சோதனையிட்ட கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் 6 மசாஜ் மையங்களை நிரந்தரமாக மூடியது. நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சம்மந்தப்பட்ட 6 மசாஜ் மையங்களில் தகாத செயல்பாடுகளை அடையாளம் கண்டதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 5 மசாஜ் மையங்களும் வணிக உரிமம் இல்லாது செயல்பட்டதாகவும் 1 மசாஜ் மையம் முறையான அனுமதியுடன் இயங்கி வந்தாலும் தகாத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 

சம்மந்தப்பட்ட 6 மசாஜ் மையங்களில் பணியாற்றிய 17 வெளிநாட்டுப் பெண்களையும் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் துப்புரவுப் பணியாளர்களுக்கான பணியாளர் உரிமத்தை வைத்திருந்த 8 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட எந்தவோர் ஆவணங்களும் இல்லாத 9 வெளிநாட்டுப் பெண்களும் மேலதிக விசாரணைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. மூடப்பட்டிருக்கும் வளாகங்களில் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதுடன் நேரில் ஆஜராகும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *