தலைநகரில் 7 வணிகக் கடைகளை மூடிய DBKL!
- Sangeetha K Loganathan
- 23 Jan, 2025
ஜனவரி 23,
தலைநகரில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த வணிகத் தளங்களையும் சாலையோரக் கடைகளையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சோதனை நடத்தினர். நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையில் 2 சாலையோரக் கடைகளும் 5 வாகனம் கழுவும் தளங்களும் மூடப்பட்டது.
தலைநகரின் Taman Miharja Cheras பகுதியில் இயங்கி வந்த வாகனம் கழுவு தளங்கள் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்ததாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்திடமிருந்து உரிமம் பெறாமல் பொது இடத்தில் அவை இயங்கியதால் வாகனம் கழுவும் தளத்தில் இருந்த பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBKL menutup tujuh premis perniagaan termasuk dua gerai jalanan dan lima tempat mencuci kenderaan di Taman Miharja, Cheras kerana beroperasi tanpa lesen sah. Semua peralatan dirampas dan denda dikenakan terhadap pihak yang terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



