மதவேறுபாடுகள் கொண்ட விவாவதங்கள் தேவையற்றது! – அமைச்சர் Na’im Moktar வலியுறுத்து!

top-news

மார்ச் 11,

மதவேறுபாடுகள் கொண்டவர்கள் விவாதங்களில் ஈடுபடுவது தேவையற்ற செயல் என பிரதமர் துறையின் மதவிவகார அமைச்சர்  Datuk Dr Mohd Na’im Moktar தெரிவித்தார். வேறுபட்ட இறை நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் இரு வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இது பெரிதும் பாதிக்கும் என  Datuk Dr Mohd Na’im Moktar வலியுறுத்தினார். இம்மாதிரியான விவாதத்தால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பல்லினத்துவத்தைப் பிரதிபலிக்கும் மலேசியாவில் இது போன்ற விவாதங்களால் தேவையற்ற பிரிவினையே உருவாகும் என்றும் சமூகத்தலைவர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும்  Datuk Dr Mohd Na’im Moktar வலியுறுத்தினார். தனிநபரின் கருத்துகளில் தவறுகள் இருந்தால் சமூகத் தலைவர்களாக இருப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லை எனில் சமந்தப்பட்ட நபரின் தவறுகளை வலியுறுத்தி அவரின் கருத்துகளை மீட்டுக் கொள்ள வலியுறுத்த வேண்டும் என  Datuk Dr Mohd Na’im Moktar அறிவுருத்தினார்.

Menteri Hal Ehwal Agama, Datuk Dr. Mohd Na’im Moktar, menegaskan bahawa perdebatan mengenai perbezaan agama tidak perlu kerana boleh menjejaskan keharmonian masyarakat pelbagai kaum di Malaysia. Beliau menyeru pemimpin masyarakat menangani isu ini dengan pendekatan yang lebih harmoni dan berhemah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *