“விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

top-news
FREE WEBSITE AD

சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற கவலை டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குறுவை சாகுபடிக்கான காலத்தில் மேட்டூர் அணையைத் திறக்காமல் விவசாயிகளை அரசு பாதித்ததாகக் குற்றம்சாட்டினார். பின்னர் சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், செப்டம்பர் 1-ஆம் தேதியே அணை திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சுமார் 4,000 கன அடியாக குறைந்துள்ளதாகவும், அணையின் நீர்மட்டம் 40 அடியை நோக்கி சரிந்து வருவதால் கடைமடைப் பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் சென்றடையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில் சம்பா சாகுபடியை திட்டமிட்டபடி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *