தன்னிச்சையாக பாஸ் முடிவெடுக்க முடியாது! பேராசிரியர் ராமசாமி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 1: பெரிகாத்தான் நேஷனலில் உள்ள கட்சிகள் மட்டுமே கூட்டணியின் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடலாம் என்று பாஸ் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் எந்தத் திசையில் செல்லலாம் என்பதை பாஸ் கட்சியால் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது என்று உரிமை தலைவர் பி. ராமசாமி தெரிவித்துள்ளார்.

உரிமை கட்சி, பெர்சாத்து தலைவர் முகைதீ யாசின் தலைமையில் இயங்கும் இகாத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் என்ற தளர்வான கூட்டணியின் ஒரு பகுதியாகும்.

வரவிருக்கும் மலாக்கா தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலின் சார்பில் இகாத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று முகைதீன் அறிவித்துள்ளார்.

இகாத்தான் பிரிஹாத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரிகாத்தான் நேஷனலின் உறுப்பினர்கள் இல்லை என்றாலும், அவை பெர்சாத்து கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று ராமசாமி கூறினார்.

முன்னதாக IPR கூட்டணிக் கட்சிகள் PN கூட்டணியில் அங்கம் வகிக்காததால், கூட்டணி தனது சின்னத்தின் கீழ் போட்டியிட அவற்றை அனுமதிக்க முடியாது என்று துவான் இப்ராஹிம் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ராமசமி,நாட்டில் எதிர்க்கட்சிகளின் போக்கை தன்னால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பது போல் பாஸ் கட்சி சிந்திக்கவோ செயல்படவோ கூடாத என்று  தனது முகநூல் பதிவில் கூறினார்.

PN கூட்டணிக்கு தற்போது PAS கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் தலைமை தாங்குகிறார்.

முன்னதாக மலாக்காவில் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளன என்பது குறித்து IPR கட்சிகள் ஒரு "PN-நிலைக் குழுவுடன்" பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முகைதீன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *