தீபாவளிக்குக் கூடுதல் விடுமுறை! கல்வி அமைச்சர் அறிவிப்பு!

top-news

நவம்பர் 11,

தீபாவளிக்கு மாணவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்குக் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். இது தொடர்பாகக் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வக் கடிதத்தை அனைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் IPG நிர்வாகத்தினர் தீபாவளிச் சிறப்பு விடுமுறையை உறுதிப்படுத்தவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK உத்தரவிட்டுள்ளார். 

நவம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை தீபாவளி என்பதால் நவம்பர் 6 வெள்ளிக் கிழமை அரை நாளுடன் வகுப்புகள் நிறைவடையும் என்றும் FADHLINA SIDEK தெரிவித்தார். கெடா, கிளாந்தான், திரங்கானு ஆகிய 3 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் நவம்பர் 9 முதல் நவம்பர் 12 வரையிலும் PERLIS, PULAU PINANG, PERAK, SELANGOR, MELAKA, NEGERI SEMBILAN, JOHOR, PAHANG, SABAH, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரையில் விடுமுறையும், நவம்பர் 10 முதல் நவம்பர் 13 வரையில் அரை நாள் இயங்கலை வகுப்புகளும் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். 

இயங்கலை வகுப்புகளை நடத்த விரும்பாத ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் கூடுதல் விடுமுறை அல்லது மற்றொரு நாளில் இந்த வகுப்புகளை நடத்தவும் அனுமதியளிக்கப்படுவதாகவும் இது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கு ஏற்பவை என்றும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்