லீக் 1 சிறந்த வீரர் விருதை மீண்டும் வென்றார் டெம்பேலே

top-news
FREE WEBSITE AD

பிரான்ஸ் லீக் 1 கால்பந்து தொடரின் சிறந்த வீரருக்கான விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக Paris Saint-Germain (PSG) அணியின் நட்சத்திர வீரர் Ousmane Dembele-க்கு வழங்கப்பட்டுள்ளது.

28 வயதான டெம்பேலே, இந்த சீசனில் PSG அணியை லீக் பட்டத்திற்கு நெருக்கமாக கொண்டு சென்றதுடன், UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கும் முன்னேற முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக இந்த உயரிய விருது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை தொடர்ந்து இரண்டு சீசன்களில் வென்ற ஐந்தாவது வீரராக டெம்பேலே சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு, ஸ்வீடன் கால்பந்து ஜாம்பவான் Zlatan Ibrahimovic 2014ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதை வென்றிருந்தார்.

கடந்த ஆண்டு வரை இந்த விருதை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற Kylian Mbappe, தற்போது Real Madrid அணிக்கு மாறியதைத் தொடர்ந்து, PSG-யின் முக்கிய தாக்குதல் வீரராக டெம்பேலே திகழ்ந்து வருகிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *