வீணா விஜயன் டைரியில் துபாய்க்கு ‘ஹவாலா’ பணப் பரிவர்த்தனை விவரங்கள்? அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 16 Sep, 2026
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்-மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் தொடர்பான விசாரணையில், துபாய்க்கு ‘ஹவாலா’ வழியாக பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அடங்கிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வீணா விஜயனுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சேவை வழங்காமல் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான சோதனையின்போது வீணா விஜயனின் டைரி கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த டைரியில், 2024 செப்டம்பர் 17-ஆம் தேதியிட்ட பதிவில் இந்தியாவில் இருந்து ரூ.85 லட்சம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் 3.49 லட்சம் ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் துபாயில் ஒருவரால் பெறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
வெளிநாட்டில் நிறுவனம் தொடங்குவதற்காகவே இந்தப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வீணா விஜயன் விசாரணையின்போது தெரிவித்ததாக செய்தி கூறுகிறது. ஆனால், பினாமி பெயரில் நிறுவனம் தொடங்கி பணத்தை முதலீடு செய்வதே நோக்கம் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



