தனுஷின் ‘ஓம்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 15 –

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அண்மையில் ‘ஓம்’ என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் ‘ஓம்’ படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *