நடைபயிற்சியின்போதே வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- Surendran Sumdraraj
- 15 Apr, 2026
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதற்குமுன்னர் இன்று காலை அவர் தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது வழக்கமான நடைபயிற்சியை மேற்கொண்டபடியே அப்பகுதியில் இருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு ஆதரவு கோரி, அவருக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் திடீரென நடைபயிற்சியின் போது மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், கை குலுக்கி வரவேற்றனர். சிலர் அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



