‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்
- Surendran Sumdraraj
- 24 Apr, 2026
தமிழக சட்டசபைத் தேர்தல் நாளில் நடிகர் அஜித் குமார் வாக்களித்தது பெரும் கவனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, “மாற்றம் தேவையில்லை” என்று அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவின.
சென்னையின் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் அதிகாலை நேரத்தில் வாக்களித்த அஜித், எளிமையாக வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதையடுத்து, ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் “மாற்றம் தேவையில்லை” என்று கூறியதாக சில தகவல்கள் பரவின.
ஆனால், இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அஜித் எந்தவித அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், “மாற்றம் தேவையில்லை” என்ற வார்த்தையை அவர் கூறியதில்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் திருத்தப்பட்டவை அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை எனவும் அவர் கூறியுள்ளார். அஜித் பொதுவாக அரசியல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



