நஜிப் வீட்டுக்காவல் விவகாரத்தில் மாமன்னரை நான் அவமதிக்கவில்லை – அன்வார் விளக்கம்

top-news

கோலாலம்பூர், நவ 13: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரத்தில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவைத் தாம் மீறிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மாமன்னருக்கும் தமக்கும் இடையிலான உறவு தொடர்ந்து நல்ல முறையில் இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மாமன்னர் தம்மைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலாக்கா, ஆயர் மோலெக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்வார், நஜிப்பை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பான முடிவைத் தன்னிச்சையாக எடுக்கத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும், அது சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய விவகாரம் என்றும் விளக்கமளித்தார்.

நஜிப் ஏற்கெனவே நான்கு ஆண்டுகள் நீண்டகாலம் சிறையில் இருந்ததை மாமன்னர் கருத்தில் கொண்டு, எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்க விரும்பியதாக அன்வார் குறிப்பிட்டார். இருப்பினும், அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தில் சட்டத்துறை தலைமை அலுவலகத்தின் ஆலோசனையும் அவசியமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

மாமன்னரின் உத்தரவு தொடர்பாக சட்டத்துறை தலைமை அலுவலகம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, நீதிமன்றத்தின் விளக்கத்தையும் பெற வேண்டியிருந்தது. இதற்காகவே காலதாமதம் ஏற்பட்டதே தவிர, மாமன்னரின் உத்தரவை மீறும் நோக்கம் அரசாங்கத்துக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்