சீனப்புத்தாண்டுக்கு 50% TOLL கழிவு!
- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
சீனப்புத்தாண்டுக்கு போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் 50% விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக பொதுப்பணி அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi இன்று அறிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் இது தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கானச் சாத்தியகூறுகளை அரசு ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனவரி 27, அதிகாலை 12.01 மணியிலிருந்து ஜனவரி 28 இரவு 11.59 மணி வரையில் இந்த 50% TOLL கழிவு நடைமுறையில் இருக்கும் என அவர் தெரிவித்தார். அடுத்தடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பண்டிகை காலங்களில் வழங்கப்பட்டுள்ள இலவச TOLL சலுகையின் மதிப்பு RM356.18 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
Kerajaan menawarkan diskaun tol 50% sempena Tahun Baru Cina pada 27 Januari (12.01 pagi) hingga 28 Januari (11.59 malam). Menteri Kerja Raya Datuk Seri Alexander Nanta Linggi menyatakan nilai keseluruhan rebat tol perayaan sejak 2023 berjumlah RM356.18 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



