பட்டறை உரிமையாளருக்குக் கத்திக் குத்து! – SUBANG JAYA
- Sangeetha K Loganathan
- 11 Dec, 2024
டிசம்பர் 11.
வாகனம் பழுது பார்க்கும் பட்டறையின் உரிமையாளரை வாடிக்கையாளர் கத்தியால் குத்திய சம்பவம் சுபாங் ஜெயாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் பிரேக்கைப் பழுதுபார்க்க வந்த 40 வயது ஆடவர், தமது வாகனத்தைச் சரியாகப் பழுது பார்க்கவில்லை என கடையின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் 54 வயது பட்டறை உரிமையாளரை வாடிக்கையாளர் கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். சந்தேகத்திற்குரிய 40 வயது வாகனமோட்டியை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் கத்திக் குத்துக்குள்ளானப் பட்டறை உரிமையாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pemilik bengkel di Subang Jaya cedera akibat ditikam oleh pelanggan yang tidak puas hati dengan pembaikan brek kenderaannya. Polis telah mengenal pasti suspek berusia 40 tahun dan sedang mencarinya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



