தீபாவளி ரிலீஸ்: ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 14 –

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரமாண்டமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *