மு.க.ஸ்டாலின் தலைமையில் தேசிய அளவில் 3-ஆவது அணி – திமுக முயற்சி

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 14 –

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி, மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து பேசினார். தொகுதி மறுவரையறை, இந்தியா கூட்டணியில் பிராந்திய கட்சிகளின் பங்கு மற்றும் காங்கிரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரத்பவார் மற்றும் அவரது மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரையும் கனிமொழி சந்தித்துள்ளார்.

காங்கிரசுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள மாநில மற்றும் பிராந்திய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்புகள் பார்க்கப்படுகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *