ஜமீன்களிலும் பண்ணைகளிலும் இருந்த அரசியலைப் பாமரர்களிடம் கொண்டு சென்றது திமுக – உதயநிதி
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
சென்னை, செப். 17-
ஜமீன்களிலும் பண்ணைகளிலும் மட்டுமே இருந்த அரசியலை சாதாரண மக்களின் கைகளுக்குக் கொண்டு சென்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட முன்னோடிகள் கொட்டும் மழையில் திமுகவை தொடங்கியதாக நினைவுகூர்ந்த அவர், கடந்த 78 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கட்சி பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளதாகக் கூறினார்.
சமூக நீதி, மாநில உரிமை, பெண்கள் விடுதலை மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு திமுக செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



