ஹஸ்மா இறந்துபோவார் என்று நான் நினைக்கவில்லை! - மகாதீர் உருக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 29: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, தனது மனைவி டாக்டர் ஹஸ்மா அலி இறந்துபோவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அதற்கு முந்தைய நாள் அவர் நலமாகவே காணப்பட்டார் என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பகாங் மாநில ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தபோது, ​​அவருடன் மகாதீர் உரையாடும் காணொளி ஒன்று மகாதீரின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

ஹஸ்மாவுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும் பகாங்கிலிருந்து வருகை தந்த அரச குடும்பத்தினருக்கு முன்னாள் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே  தனது தாயார் தனது கடைசி மூச்சை விடும் வரை தனது தந்தை அவருடனேயே இருந்ததாக முக்ரிஸ் மகாதீர் கூறினார். மகாதீரும் ஹஸ்மாவும் 70 ஆண்டுகள் திருமண வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *