மகனுக்கு சீட் கிடைக்காததால் புவாட் அம்னோவை விட்டு வெளியேறினார்; அஸ்ய்ராப் வாஜ்டி குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 25 Jun, 2026
ஜொகூர் பாரு, ஜூன் 25 –
ஜொகூர் மாநில அம்னோ விவகாரத்தில் அரண்மனை தலையீடுதான் காரணம் என கூறப்படும் குற்றச்சாட்டை அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ய்ராப் வாஜ்டி துசுக்கி மறுத்துள்ளார். முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் சர்காஷி கட்சியை விட்டு விலகியதற்கான உண்மையான காரணம், அவரது மகனுக்கு ரெங்கிட் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காததே என அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்ய்ராப் வாஜ்டி தனது சமூக வலைத்தள பதிவில், முகமட் புவாட் தமக்கு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பி, தனது மகனை ரெங்கிட் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் பரிசீலிக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறி, அம்னோவுக்கு எதிராக விமர்சனம் செய்வேன் என்று எச்சரித்ததாகக் கூறியுள்ளார்.
“அவரே எனக்கு நீண்ட செய்தி அனுப்பி, தனது மகனை வேட்பாளராகத் தேர்வு செய்யாவிட்டால் கட்சியை விட்டு விலகுவேன், கட்சியை கடுமையாக விமர்சிப்பேன் என்று தெரிவித்திருந்தார்,” என்று அஸ்ய்ராப் வாஜ்டி குறிப்பிட்டார்.
மேலும், முகமட் புவாட்டின் மகன் இளம் வயதுடையவராகவும், எதிர்காலத்தில் சிறந்த தலைவராக உருவாகும் திறன் கொண்டவராகவும் இருப்பதை தாம் மறுப்பதில்லை என்றும், ஆனால் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது வயது அல்லது திறமை மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் மற்றும் தொகுதி சார்ந்த காரணிகளையும் கட்சி பரிசீலிக்கும் என்று விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



