போர்ச் சூழலால் கவனம் பெறும் KLIA

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 2: மத்திய கிழக்கில் தொடரும் மோதல், அப்பகுதியின் முக்கிய விமானப் போக்குவரத்து நுழைவாயில்களைச் சீர்குலைத்து வருவதால், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) ஒரு டிரான்சிட்  மையமாகத் தனது பங்கை வலுப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதாக மலேசிய விமானப் பொக்குவரத்துக் குழுமமான  MAG தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய டிரான்சிட் மையங்களில் ஏற்பட்ட செயல்பாட்டுச் சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளை ஈர்ப்பதற்கு, இந்த நெருக்கடி தென்கிழக்கு ஆசிய விமான நிலையங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி நசருதீன் பக்கார் கூறினார்.

நமக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைக் கொண்டு, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதை உறுதி செய்வோம்.என்று அவர் இன்று நடைபெற்ற MAG-இன் 2025 மறுஆய்வு விளக்கக் கூட்டத்தில் கூறினார்.

மத்திய கிழக்கில் வான்வெளி மூடல்கள் மற்றும் சீர்குலைவுகளால் ஏற்படும் மாறிவரும் பயணப் போக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள, குழுமம் வழித்தடங்களையும் விமானங்களின் எண்ணிக்கையையும் மறுஆய்வு செய்து சரிசெய்யும் என்றும் அவர் கூறினார்.

 இந்த மோதல், விமான நிறுவனங்களை விமானங்களின் வழித்தடங்களை மாற்றவும், பயண நேரத்தை நீட்டிக்கவும், சில சேவைகளை நிறுத்திவைக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், பொதுவாக வளைகுடா மையங்கள் வழியாகப் பயணிக்கும் பயணிகளின் ஓட்டத்தையும் இது பாதித்துள்ளது.

பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளை அதிகளவில் நாடுவதால், சில நீண்ட தூர வழித்தடங்களில், குறிப்பாக கிழக்கு நோக்கிய மற்றும் மேற்கு நோக்கிய பயணங்களை இணைக்கும் வழித்தடங்களில், தேவை அதிகரித்துள்ளதாக MAG கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *