வெளிநாட்டுப் பட்டாசுகளுடன் இருவர் கைது!
- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
சட்டவிரோதமாகப் பட்டாசுகளைக் கடத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Rantau Panjang சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தைச் சோதனையிட்டதில் RM 7,000 மதிப்பிலானப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு சிறப்புப் படை PGA ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகாலை 12.10 மணியளவில் வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் 3 சாக்கு மூட்டைகளிலும் 2 பெட்டிகளிலும் பல்வேறு வகையிலானப் பட்டாசுகள் இருந்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Dua individu ditahan di Rantau Panjang kerana menyeludup mercun secara haram. PGA merampas pelbagai jenis mercun bernilai RM7,000 yang disimpan dalam tiga guni dan dua kotak. Hasil siasatan awal mendapati mercun tersebut diimport secara tidak sah dari luar negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



