சொகுசு எஸ்யூவி மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

top-news
FREE WEBSITE AD

ரொம்பின், ஆக. 1-

பகாங் மாநிலம் ரொம்பின் மாவட்டம், தெலுக் காடிங் அருகே குவாந்தான்–ஜொகூர் பாரு சாலையின் 150ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஷரிப் ஷாய் ஷரிப் மொண்டோய் கூறினார்.

இந்த விபத்து அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார். சொகுசு விளையாட்டுப் பயன்பாட்டு வாகனம் (SUV) மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் தெலுக் காடிங்கிலிருந்து குவாந்தான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது என்றார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், இளம் ஓட்டுநர் ஒருவர் இயக்கிய எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதாகத் தெரியவந்துள்ளது.

மோதலின் தாக்கத்தால் எஸ்யூவி சாலையின் இடதுபுறத்தில் உள்ள வடிகாலில் கவிழ்ந்தது. அதேவேளையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் சுமார் 26 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *