கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தம்பி பலி! புத்தாண்டுக் கொண்டாட்டம் சோகம்!
- Thinagaren Sanggaren
- 01 Jan, 2026
ஜனவரி 1,
குடும்பத்துடன் புத்தாண்டுச் சுற்றுலாவுக்காகக் கடலில் குளித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். திரங்கானு கடற்கரையில் குடும்பத்துடன் சுற்றுலாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது 39 வயது பெண் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதும் காப்பாற்றுவதற்காக 37 வயது அவரின் தம்பி முயற்சித்த போது இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர் Maizura Abdul Kadir தெரிவித்தார். இன்று காலை 10.27 மணிக்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்திடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாகவும் 10.54 மணிக்கு கடலில் மூழ்கிய 39 வயது Nor Baizura எனும் பெண்ணை மீட்டதாகவும் டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர் Maizura Abdul Kadir தெரிவித்தார்.
கடலில் மூழ்கிய
37 வயது Fazir Shafie எனும் ஆடவரை மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் மீட்கப்பட்ட 39 வயது பெண் உயிரிழந்ததைச்
சுகாதார அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளதாகவும் டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர் Maizura Abdul Kadir தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த
போது இச்சோகம் நிகழ்ந்திருப்பதாகவும் தடை செய்யப்பட்ட அல்லது பாதுகாப்பற்ற கடல் பகுதிகளில்
எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர்
Maizura Abdul Kadir கேட்டுக்கொண்டார். இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி கடலில் மூழ்கிய மற்றொரு நபரான
37 வயது Fazir Shafie-ஐ தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



