சமய நெறிகளைப் போதியுங்கள்! - ஆசிரியர்களுக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், மே 16: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

ஆசிரியப் பணியே அறப்பணி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களின் சேவை மிக முக்கியம் என்று கூறினர். தீபமாக அவர்கள் இருந்தால் தரமான சமுதாயமாக நாம் வெளிச்சம் பெறுவோம் என்று கூறினார்.

மேலும் பணியில் இருக்கும்போதுதான் ஆசிரியர்கள் என்றில்லை... ஓய்வுபெற்ற பிறகும்கூட தங்களது திருப்பணியைத் தொடரலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

தனது தந்தையார் சமய வகுப்புகளை நடத்தி வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக தமது சகோதரியும், அண்மையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியையுமான திருமதி சித்திரை மலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது இலவச சமய வகுப்பினை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தமது சகோதரியும், இன்னொரு சமய ஆசிரியரும்  ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் இந்த சமய வகுப்பினை எந்தவித ஊதியமும் பெறாமல் இலவசமாகவே நடத்துகிறார்கள் என்று கூறினார். 

சமயநெறிகளை நம் பிள்ளைகள் அறிந்துகொண்டாலே போதும் தவறுகள் பக்கம் அவர்கள் போக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

எனவே ஆசிரியர்கள் கல்வி திட்ட பாடத்தோடு அவ்வப்போது சமய நெறிகளையும் போதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *