ரவாங் ஏரியில் பிணம்!
- Shan Siva
- 23 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 23: ராவாங்கில் உள்ள தமான் ரெக்ரியாசி துன் பேராக் ஏரியில் நேற்று ஓர் ஆணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காலை சுமார் 7.45 மணியளவில் இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்ததாக கோம்பாக் காவல் துறை உதவி ஆணையர் இப்ராஹிம் ஹுசின் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஏரியின் மேற்பரப்பில் ஒரு மலேசிய ஆணின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், சடலத்தில் வெளிப்புறக் காயங்களுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது கண்டறியப்பட்டது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சரியான காரணத்தைக் கண்டறிய, பிரேதப் பரிசோதனைக்காக சடலம் செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக இப்ராஹிம் கூறினார்.
முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



