நெகிரியைப் போலவே மலாக்காவிலும் கூட்டணிக்குத் தயார்! – ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக 8: வரவிருக்கும் மலாக்கா தேர்தலில், பாரிசான் நேஷனல் தற்போது தன்வசம் வைத்துள்ள 21 இடங்களையும் தக்கவைத்துக் கொள்ள முயல்கிறது என்று அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

இருப்பினும், நெகிரி செம்பிலான் தேர்தல்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாட்டைப் போலவே, பெரிகாத்தான் நேஷனல் உட்பட எந்தவொரு கட்சியுடனும் ஒரு புரிந்துணர்வுக்கு இந்தக் கூட்டணி தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மலாக்காவில் உள்ள 28 மாநில இடங்களில், முதலமைச்சரும் மலாக்கா பாரிசாந் நேஷனல் தலைவருமான அப் ரவுஃப் யூசோ, அனைத்து 21 இடங்களையும் தக்கவைத்துக் கொள்வதில் உறுதியாக இருப்பதாக தம்மிடம் தெரிவித்ததாக ஜாஹிட் கூறினார்.  

மேலும், அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே நிச்சயமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு குறித்தும் பாரிசான் நேஷனலின் மத்திய தலைமையுடன் கலந்தாலோசிக்கப்படும், மேலும் அவர்களுக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கும்  என்று இன்று கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *