பிரதமர் உத்தரவிட்டால் பதவி விலகத் தயார்! - முகமட் ஹசான்
- Shan Siva
- 20 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 20: பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள மற்ற தலைவர்களைத் தாக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.
"எங்கள் செய்தி அனைத்து வாக்காளர்களையும் சென்றடைவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம். நாங்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த மாட்டோம். இருப்பினும், பிரதமர் என்னை ராஜினாமா செய்ய உத்தரவிட்டால், நான் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
அமைச்சரவை அமைச்சர்களையும் அவர்களது துணை அமைச்சர்களையும் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதால், அது அவரைப் பொறுத்தது என்று நேற்று சிரம்பான் மம்பாவில் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



