ஹேக் செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் இணையதளம்! - பாதிப்பில்லை என அமைச்சு அறிவிப்பு
- Shan Siva
- 01 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 1: கடந்த வாரம் சுகாதாரம் அமைச்சின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டபோது, முக்கியத் தரவுகள்
கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் சுகாதார சேவை வழங்கும் அமைப்புகள் வழக்கம் போல் தொடர்ந்து
இயங்கி வருவதாகவும், கடுமையான இணையப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு தனி உள்கட்டமைப்பால்
அவை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியது.
இந்த இணையதளம், நிறுவன மற்றும் பொதுத் தகவல்களைப் பரப்புவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; நோயாளிகளின்
மருத்துவப் பதிவுகளையோ அல்லது சுகாதாரத் தரவுகளையோ இது சேமிப்பதில்லை என்று அமைச்சு
விளக்கமளித்துள்ளது.
மீளுருவாக்கம் செய்யப்படும் வரை, இணையதளத்திற்கான அணுகல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம்
கூறியது.
கடந்த சனிக்கிழமை, தனது இணையதளம் ஹேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்திருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



