சுமத்ராவில் காணாமல்போன மலேசியரைத் தேடும் பணி தீவிரம்!
- Shan Siva
- 02 Dec, 2025
கோலாலம்பூர், டிச 2: மேற்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசியக் குடிமகனைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நவம்பர் 27 முதல் மூன்று மலேசிய சுற்றுலாப் பயணிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விஸ்மா புத்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அவர் பயணித்த வாகனம் நிலச்சரிவில் சிக்கியதை அடுத்து 30 வயதான அஸ்ருல் நிஜாம் அப்ரிட்வ்சன் காணாமல் போனதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு இந்தோனேசிய நாட்டவர்களையும் அந்த வாகனம் ஏற்றிச் சென்றது.
நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



