நாமெல்லாம் ஒரே வம்சாவளி! பெர்சாத்துவும் பாரிசானுக்கு ஆதரவு கொடுங்கள்! - கைரி ஜமாலுடின்
- Shan Siva
- 03 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 3: ஜூலை 11 அன்று நடைபெறும்
ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில், பாரிசான் நேஷனல் வேட்பாளர்களை
ஆதரிப்பதில் பாஸ் கட்சியைப் பின்பற்றுமாறு பெர்சாத்து ஆதரவாளர்களை அம்னோ முன்னாள்
இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் வலியுறுத்தியுள்ளார்.
மலாய் அல்லாத வாக்காளர்களிடையே ஆதரவை அதிகரிக்க பாரிசான் நேஷனல் செயல்பட்டு
வரும் வேளையில், குறிப்பாக ஜொகூரில், மலாய் ஆதரவை வலுப்படுத்தும்
முயற்சிகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
பாரிட் யானியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நஜிப் சமூரிக்காகப் பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெரிகாத்தான் வேட்பாளர் இல்லாத பட்சத்தில், பாரிசான் நேஷனலை ஆதரிக்குமாறு பெர்சாத்து வாக்காளர்களையும் தாங்கள் அழைக்கிறோம் என்று கூறினார்.
மலாய் அல்லாதவர்கள் ஓரங்கட்டப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றாலும், மலாய் ஒற்றுமை என்பது மலாய்காரர்களில்
ஒரு பெரும் பகுதியினரால்,
குறிப்பாக ஜொகூரில்,
எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
மலாய்க்காரர்களிடையே நிலவும் மாபெரும் ஒத்துழைப்பின் பிரதிபலிப்புதான் பாஸ்
கட்சியின் இந்த உத்தரவு என கைரி விவரித்தார். மேலும், பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளை பாரிசானின் அரசியல் எதிரிகளாகக்
கருதக்கூடாது என்றும், மாறாக அவை ஒரே
வம்சாவளியைச் சேர்ந்தவை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



