மியன்மார் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
- Surendran Sumdraraj
- 18 May, 2026
மியன்மார் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு பல பகுதிகளில் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் மத்திய பகுதியில் அமைந்திருந்தது. பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இதுவரை பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



