பிறப்புக்கு ஈடாக இறப்பு:இறப்புக்கு ஈடாக மத மாற்றம்-ஓம்ஸ் தியாகராஜன் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 7-

நாட்டிலுள்ள இந்துக்கள் மதம் மாறுவது அவரவர் விருப்பம். ஆனால் மதம் மாறி, இந்து சமயத்தை அழிக்க நினைப்பது ஒரு துரோகமாக கருதுகின்றேன்.இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை மலேசிய இந்து சங்கம் மிகவும் எச்சரிக்கையாக கவனத்தில் எடுத்துக்கொண்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்தினார்.

நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டத்தில் மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசிய இந்து ஆலயங்களுடனான அவசர சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓம்ஸ் பா. தியாகராஜன் பேசினார்.அவர் மேலும் பேசுகையில், மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல நிகழ்ச்சியாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆலயத் தலைவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு இனி ஆக்கப்பூர்வமான சமயப் பணிகளில் ஈடுபட்டு இந்து மதத்தையும் ஆலயங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுகாறும் நம் நாட்டிலுள்ள ஆலயத் தலைவர்கள் சிறந்த பணிகளை ஆற்றி வந்துள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த பணி தொடர வேண்டும். இன்னும் 50ஆண்டும் செய்வதற்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. இது நம் முன் எழுந்துள்ள கேள்வியாகும்.

காரணம் பிறப்புக்கு ஈடாக இறப்பு உள்ளது. இறப்புக்கு ஈடாக மத மாற்றம் இருப்பதால். ஆலயங்களில் வழிபட நம் மக்கள் இருப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். மலேசிய இந்து சங்கம் சமய நடவடிக்கைகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டு சமய விவகாரங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று ஓம்ஸ் பா. தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.

Pengerusi OMS, P. Thiagarajan menegaskan bahawa pertukaran agama adalah pilihan peribadi, tetapi usaha memusnahkan agama Hindu dianggap sebagai pengkhianatan. Beliau menyeru Malaysian Hindu Sangam (MHS) agar lebih tegas dalam memantau isu ini dan mengajak ketua kuil terus melindungi agama Hindu secara aktif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *