இரண்டு தொழிற்சாலைகளில் கடும் தீ! புகை மண்டலமான சாலை!

top-news

சுங்கை பூலோ, நவம்பர் 6:கம்போங் பாரு சீனாவில் உள்ள ஜாலான் வெல்ஃபேர் பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் கடும் தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதியைப் புகை மண்டலம் சூழந்தது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகையானது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

 தங்களுக்கு காலை 6.36 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

உடனடியாக நான்கு தீயணைப்பு வாகனங்கள், மூன்று தண்ணீர் டேங்கர்கள் மற்றும் 29 பணியாளர்களை அனுப்பியதாக அவர் கூறினார்.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை இன்று அவர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்