பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை
.jpeg)
- Shan Siva
- 18 Dec, 2024
கோலாலம்பூர், டிச 18: பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்குச் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், ஹுலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா , ஜொகூர் மற்றும் சரவாக்கில் உள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *