ஜனவரி 1 முதல் திரெங்கானு DrawBridge-இல் கனரக வாகனங்கள் செல்லத் தடை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்புர், டிச 16: கோல திரெங்கானுவின் புகழ்பெற்ற டிராப்பிரிட்ஜை ஜனவரி 1 முதல் கனரக வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3.5 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள வாகனங்கள் மட்டுமே இந்த கட்டமைப்பில் அனுமதிக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகள், டிரெய்லர்கள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் போன்ற ஐந்து டன் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள கனரக வாகனங்களைத் தடுக்க உயரக் கட்டுப்பாட்டுத் தடை நிறுவப்படும் என்று Ti Properties Sdn Bhd தலைமை நிர்வாக அதிகாரி அவாசி முகமது தெரிவித்ததாக பெரிட்டா ஹரியன் தெரிவித்துள்ளது.

மற்ற சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.

அதிக சுமை கொண்ட வாகனங்கள் காரணமாக கட்டமைப்பு சேதத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் கூறினார்.

பாலத்தை நோக்கிச் செல்லும் பிரதான சாலைகளில் உயரம் மற்றும் எடை வரம்பு குறித்த போதுமான அடையாளப் பலகைகளை நிறுவனம் வைக்கும் என்று அவாசி கூறினார்.
புதிய விதியைப் பற்றி சாலை பயனர்களுக்கு நினைவூட்டுவதற்காக பாலத்தில் உள்ள LED திரைகளிலும் அறிவிப்புகள் காட்டப்படும்.

கனரக வாகனங்கள் கோலா நெருஸ் பகுதியை கோலா தெரெங்கானு நகர மையத்துடன் இணைக்கும் சுல்தான் மஹ்மூத் மற்றும் மனீர் பாலங்களைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *