தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க எடப்பாடி பழனிசாமி முயன்றார் – அருண்ராஜ் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 25 Sep, 2026
திருப்பூர்: தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயன்றதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஆட்சி அமைப்பதற்காகப் பல கோடி ரூபாயை அவர் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் அருண்ராஜ் கூறினார்.
தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ராஜ், தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்தார். அதேவேளை, அதிமுகவில் 32-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அக்கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என விமர்சித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



