கிள்ளான் சென்னை சில்க் பேலஸின் தீபாவளி அதிர்ஷ்டக் குலுக்கல்! பெண் வாடிக்கையாளருக்கு டொயோட்டா யாரிஸ் கார் பரிசு!

top-news

கிள்ளான், நவ 20: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிள்ளான் சென்னை சில்க் பேலஸ் நிறுவனம் நடத்திய சிறப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு சென்னை சில்க் பேலஸில்  RM500-க்கும் குறையாமல் ஆடைகள் வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தனர்.

இதன் அடிப்படையில் நடைபெற்ற பரிசுக் குலுக்கலில் முதல் பரிசாக டொயோட்டா யாரிஸ் கார் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசாக மோட்டார் சைக்கிளும், மூன்றாவது பரிசு உள்ளிட்ட மேலும் பல கவர்ச்சிகரமான பரிசுகளும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்தப் பரிசளிப்பு விழாவில் பல முக்கியப் பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தீபாவளியை முன்னிட்டு தங்களிடம் ஆடைகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய மதிப்புமிக்க பரிசுகளை வழங்கி மகிழ்வித்த சென்னை சில்க் பேலஸ் நிறுவனத்தின் முயற்சி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்தப் பரிசளிப்பு விழா, வாடிக்கையாளர்களுடனான நிறுவனத்தின் நம்பிக்கையான உறவையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்