தோல்விதான்.... ஆனாலும் ஆதரவும் இன்னும் அப்படியே உள்ளது! - அஸ்மின் அலி

top-news

ஜொகூர், செப் 29:  ஜொகூர் மக்கோத்தா தொகுதியில்  பாரிசான் நேசனலிடம் பெரிக்காத்தான் பெரும் தோல்வியைச் சந்தித்தாலும் பெரிகாத்தான் நேஷனலின் ஆதரவு அப்படியே உள்ளது என்று அதன் தேர்தல் இயக்குனர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

பெர்சாத்துவின் ஹைசான் ஜாபர் பெற்ற 7,347 வாக்குகள், 2022 ஜொகூர் தேர்தலில் PN வேட்பாளர் நோர் லிங்கன் பெற்ற 7,614 வாக்குகளை விட வெகு தொலைவில் இல்லை என்று அஸ்மின் கூறினார். 

2022  தேர்தலில் ஒட்டுமொத்தமாக 57.34% வாக்குகள் பதிவானது தற்போது பதிவான 53.84%  விட சற்று அதிகமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கோத்தா இடைத்தேர்தலின் முடிவுகளால்  பெரிக்காத்தான் தடுக்கப்படாது என்றும், அடுத்த பொதுத் தேர்தலுக்கான தயாரிப்பில் வாக்காளர்களை கவர்வது தொடரும் என்றும் பெர்சாத்து உச்ச மன்ற  உறுப்பினருமான அஸ்மின் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்