LIK படத்தால் மீண்டும் ஏப்ரல் 3ம் தேதியை லாக் செய்த லெஜண்ட் சரவணா, பரத்!

top-news
FREE WEBSITE AD

பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நமக்கு ஏம்ப்பா பெரிய இடத்தோட மோதணும் என லெஜண்ட் சரவணா மற்றும் பரத் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 10க்கு மாற்றினர். ஆனால், தற்போது அது வெடிகுண்டு இல்லை வெறும் குண்டு என அந்த படம் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 3ம் தேதியிலேயே மீண்டும் ரிலீஸ் தேதியை உறுதி செய்து விட்டனர்.

லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படமும், பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படமும் தற்போது ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையமைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், துருவ நட்சத்திரம் போல மீண்டும் மீண்டும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துக் கொண்டே போகிறது.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் அவரது ரசிகர்களுக்கே இந்த படத்தின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது என்கின்றனர். தமிழ்நாடு 2040ல் எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்கிற ஆர்வத்தை படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் தூண்டிய நிலையில், சூட்டோடு சூடாக இறக்காமல் இப்படி இழுத்து அடித்தால் படத்துக்குத்தான் சிக்கல் என்கின்றனர்.

 துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா தயாரித்து நடித்துள்ள லீடர் திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகப் போவதை உறுதி செய்துள்ளனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி லெஜண்ட் சரவணாவின் லீடர் மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *