நெகிரி செம்பிலான் தேர்தல் - அனைத்து தொகுதிகளிலும் பாரிசான் போட்டி!

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜூன் 6: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல்  அனைத்து 36 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும் என மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வேட்பாளர்களில் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த முகங்கள், பல்வேறு கல்விப் பின்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் அடங்குவர் என்று அவர் கூறினார்.

 பாரிசான் தொகுதி ஒதுக்கீட்டில் எம்.சி.ஏ மற்றும் எம்.ஐ.சி ஆகிய கூட்டணிக் கட்சிகளும் ஈடுபடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், இறுதி ஒதுக்கீடு விரைவில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று இன்று ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *