நெகிரி செம்பிலான் தீபாவளி விற்பனை பெருவிழாவிற்கு 30 ஆயிரம் ரிங்கிட் மானியம்-சா கி சின்!

top-news

சிரம்பான், அக்.27-

சிரம்பானில் மிக பிரமாண்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் நெகிரி செம்பிலான் தீபாவளி விற்பனை பெருவிழாவின், தொடர் ஏற்பாடுகளுக்கு உதவும் பொருட்டு 30 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு சிரம்பான் லிட்டல் இந்தியா, ரங்கோலி வால்கில் நடைபெறும் அப்பெருவிழாவுக்கு சிறப்பு வருகை புரிந்த அவர், மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் தலைமையில், மிக நேர்த்தியாக இரண்டு தளங்களிலும் இம்முறை ஏற்பாடு செய்துள்ள இத்தீபாவளி விற்பனை பெருவிழா, பயனீட்டாளர் மற்றும் இந்திய சிறு வணிகர்களுக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும், வசதியாகவும் இருப்பதை காண முடிகிறது.அதே வேளை இந்திய பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளை பொதுமக்கள் கண்டு மகிழும் ஒரு விழாவாகவும் இப்பெருவிழா அமைந்துள்ளதாக சா கூறினார்.

இப்பெருவிழாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடன படைப்புகள் மிகவும் சிறப்பாக நடந்தேறிய வேளையில், நிகழ்ச்சியை கண்டுகளித்த ரசிக பெருமக்களின் அமோக வரவேற்பை அம்மாணவ நடன குழுவினர் பெற்றனர். இந்நிகழ்வில் நெஸ்லே நிறுவன தலைமை நிர்வாகி ராஜேஸ் சிங் 3,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.

முன்னதாக அவ்விருவரும் அரசு ஆட்சிக்கழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் முன்னிலையில் ஏற்பாட்டுக்குழுவால் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடனமாட வாய்ப்பு வழங்கிய தமிழ்ப்பள்ளி தரப்பினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் இவ்விழாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு சா கி சின் மற்றும் அருள்குமார் தீபாவளி அன்பளிப்பு தொகையை வழங்கி சிறப்பித்தனர்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்