நெகிரி செம்பிலான் விவகாரம்! - அன்வார் - ஜாஹிட் தலைமையில் சிறப்புக் கூட்டம்
- Shan Siva
- 06 May, 2026
கோலாலம்பூர், மே 6: நெகிரி செம்பிலானில் ஒற்றுமை அரசாங்கக் கட்டமைப்பைத் தொடர, அம்னோ மற்றும் பக்காத்தான் ஹரப்பான் ஆகிய இரு கட்சிகளின் தலைமை மன்றங்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன.
இது நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று பக்காத்தான் ஹரப்பான் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்தி டுசுகி ஆகியோர் தெரிவித்தனர்.
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவும் பதற்றத்தைத் தூண்டினால் அல்லது சர்ச்சைகளுக்கு வழிவகுத்தால், அது உடனடியாக அம்னோ-பக்காத்தான் தலைமை ஆலோசனைக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் மன்றம் ஒப்புக்கொண்டது என்று நேற்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
அதே அறிக்கையில், நெகிரி செம்பிலானில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக இரு அரசியல் குழுக்களும் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் மன்றம் மதிப்பதாக அவர்கள் கூறினர்.
கவுன்சில் கூட்டம் பக்காத்தான் தலைவரும் பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவரும் பாரிசான் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோரால் கூட்டாக தலைமை தாங்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



