பெரிக்காத்தானில் பெஜுவாங் இருக்கலாம்; ஆனால் ஹம்சாவின் பிசிஎம் வேண்டாம்! - பெர்சாத்து
- Shan Siva
- 25 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 25: பெரிகாத்தான் நேஷனலில் பெஜுவாங் இணைவதை பெர்சாத்து கட்சி எதிர்த்ததாகக் கூறும் செய்தி அறிக்கையை பெர்சாத்து மறுத்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியில் வவாசான் நெகாரா கட்சி மற்றும் பெஜுவாங் இணைவதை பெரிகாத்தான் நேஷனலின் உச்ச மன்றத்தின் எட்டு உறுப்பினர்கள் எதிர்த்ததாகக் கூறும் செய்தி அறிக்கை "தவறானது, உண்மையற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது" என்று பெர்சாத்துவின் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசல் இஸ்மாயில் அஜீஸ் கூறினார்.
பெஜுவாங் பெரிகாத்தான் நேஷனலில் இணைவதை பெர்சாத்து கட்சி ஆதரிக்கிறது என்பதையும், பார்ட்டி சிண்டா மலேசியா (பிசிஎம்) இணைவதை மட்டுமே எதிர்க்கிறது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பெர்சாத்து முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பிசிஎம் கட்சி வவாசான் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி அறிக்கை திருத்தப்படும் என துன் ஃபைசால் நம்பிக்கை தெரிவித்தார்.
வவாசான் மற்றும் முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான பெஜுவாங் கட்சிகள் திங்களன்று பெரிகாத்தான் நேஷனலில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



