பெக்கான் விபத்து – ஒருவர் பலி; எழுவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

பகாங், டிச 30: பகாங், பெக்கான் அருகே குவாந்தான்-செகாமட் சாலை 37 வது கிலோமீட்டரில் நேற்று இரவு நடந்த விபத்தில் மருத்துவ உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 30 வயதான Nur Ezyyantie Aliakbar என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக Pekan காவல்துறைத் தலைவர் Zaidi Mat Zin தெரிவித்தார்.

இரவு 8.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஹோண்டா எச்ஆர்-வி ரக கார் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரண்டு வாகனங்கள் தலா நான்கு பயணிகளுடன் பயணித்ததாக ஜைடி கூறினார்.

இரண்டு முதல் 50 வயது வரையிலான பாதிக்கப்பட்ட மற்ற ஏழு பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும், மேலும் சிகிச்சைக்காக குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஜைடி கூறினார்.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *