தொடங்கியது ‘எல் நினோ’: பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பு; உலக நாடுகள் கவலை
- Surendran Sumdraraj
- 06 Jun, 2026
வாஷிங்டன், ஜூன் 6 –
உலகின் காலநிலை அமைப்புகளைப் பெரிதும் பாதிக்கும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் (ECMWF) உறுதிப்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸை தாண்டியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது உலகம் முழுவதும் மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த ஆண்டில் உருவாகும் எல் நினோ வலுவானதாக இருக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதன் விளைவாக சில நாடுகளில் கடுமையான வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கலாம். அதேவேளையில், சில பகுதிகளில் அதிக மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



