மலாக்கா - சபா வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு
- Shan Siva
- 26 Jul, 2026
மலாக்கா, ஜூலை 26: அதிகரித்து வரும் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இடமளிக்கும் வகையில், மலாக்காவில் மூன்றாவது நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
மலாக்கா தெங்கா மற்றும் ஜாசின் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
சபாவின் தாவாவ்வில், பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 335 பேர் ஒரு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு முதல் பெய்த தொடர் மழையால், தாவாவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



