மலாக்கா தேர்தல் - ஆகஸ்ட் 15 வேட்பாளர்களை அறிவிப்போம்! -ரஃபிஸி ரம்லி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,ஆக 8: மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை ஆகஸ்ட் 15 அன்று பெர்சாமா அறிவிக்கும் என கட்சித் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலுக்கான பெர்சாமாவின் தயாரிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கட்சியின் வேட்பாளர்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த முன்னாள் அமைச்சர் கூறினார்.

கட்சியின் அரசியலமைப்பு, வரவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக, தானும் மற்ற பெர்சாமா தலைவர்களும் விரைவில் நாடு தழுவிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்குச் செல்லத் தொடங்குவோம் என்றும் ரஃபிஸி கூறினார்.

அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தல், அதிகபட்சமாக 2027 பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற வேண்டும். ஆனால், அது செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என்று முதலமைச்சர் அப் ரவுஃப் யூசோ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்சாமாவின் முதல் தேர்தல் பயணம் ஜூலை 11 அன்று நடந்த ஜொகூர் தேர்தலில் இருந்தது. அதில் அதன் 15 வேட்பாளர்களும் தோல்வியடைந்து, தங்களது வைப்புத்தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *