மலாக்கா துப்பாக்கிச்சூடு வழக்கு: ‘உடனே கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ – பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
- Shan Siva
- 21 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 21: கடந்த ஆண்டு நவம்பரில் மலாக்கா, துரியான் துங்கால் பகுதியில் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் மூன்று ஆண்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் விசாரணை (Inquest) நடத்துமாறு சட்டத்துறைத் தலைமை அலுவலகம் (AGC) எடுத்துள்ள முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்ப்ரீத்ராஜ் சிங், மரணத்திற்கான காரணம் குறித்து கடுமையான சந்தேகம் அல்லது
போதிய ஆதாரங்கள் இல்லாதபோதுதான் நீதிமன்ற விசாரணை அவசியம் என தெரிவித்தனர்.
ஆனால், இந்த வழக்கில் காவல்துறையினர் முதலில்
மூவரையும் உயிருடன் பிடித்த பின்னரே சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் ஒலி ஆதாரம் (Audio Recording) இருப்பதாகவும், இது காவல்துறையின் தற்காப்புக்காகச் சுட்டோம் என்ற விளக்கத்துக்கு முரணானது என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், உடற்கூறு ஆய்வு அறிக்கைகளிலும் (Post-mortem Report) தோட்டாக்கள் பாய்ந்த விதம், இது திட்டமிட்ட சுடு கொலை (Execution-style killing) என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வலுவான
ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக தேவையற்ற நீதிமன்ற
விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், நீதிமன்ற விசாரணை என்பது குற்றவியல்
வழக்குத் தொடர்வதற்கு மாற்றாக இருக்க முடியாது என்றும், அது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி
வழங்காது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மலேசிய
அரசியலமைப்பின் 145-வது பிரிவின்படி, குற்றவியல் வழக்குத் தொடரும் அதிகாரம்
முழுமையாக சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார் வசமே இருப்பதாகவும், அந்த அதிகாரத்தை வேறு யாருக்கும்
ஒப்படைக்க முடியாது என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர்
மீது வழக்குத் தொடர சட்டத்துறைத் தலைவர் தயாராக இல்லையெனில், அவர் பதவி விலக வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது
அரசின் பொறுப்பு என்றும் அவர்கள் கூறினர்.
உயிரிழந்த மூவரின்
மரணத்திற்கான காரணம், சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை மற்றும்
குற்றவியல் சட்ட மீறல் ஏதேனும் நடந்ததா என்பதை கண்டறிய நீதிமன்ற விசாரணை (Inquest) நடத்துமாறு சட்டத்துறைத் தலைமை அலுவலகம் நேற்று
உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



