சொஸ்மா கைதிகளின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பூலோ, பிப் 8:  சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பல குடும்ப உறுப்பினர்கள் தங்களின் வருகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதை எதிர்த்து சுங்கை பூலோ சிறை வளாகத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

காலை 11.30 மணியளவில் சிறை வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே கறுப்பு உடை அணிந்த சுமார் 50 எதிர்ப்பாளர்கள் கூடி, சொஸ்மாவை ஒழிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

கைதிகளின் உடல்நலம் மற்றும் சிறையில் அவர்களின் நிலைமைகளை தீர்மானிக்க குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க விரும்புவதாக கூறினார்.

எவ்வாறாயினும், தைப்பூச விடுமுறை காரணமாக சிறைச்சாலை அலுவலகம் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கைதிகளை பார்வையிடுவதற்கான விண்ணப்பங்கள் நேற்றைய தினம் வழங்கப்படவில்லை. 

இதனிடையே 32 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும்அவர்களுக்கு ஆதரவாக  குடும்ப உறுப்பினர்களும் வளாகத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்ததாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

 இன்றைய போராட்டத்தை மனித உரிமைகள் குழுவான சுராம் எற்பாடு செய்திருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *